கதாப்பாத்திரம்

JC Chee as
சோவ் வொக் கியோங்
26 வயதான தேசிய கால்பந்து அணியின் தலைவரும் ஆசியாவின் சிறந்த கோல் பாதுகாவலரான இவர் தன்னுடைய குடும்பத்தில் மூத்த மகன் ஆவார். ஒரு நாள், தன்னுடைய குடும்பத்திற்கும் காதலிற்கும் ஆற்ற வேண்டிய பொறுப்புகளை உணர்கின்றார். அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கும் அதை வேளையில் கால்பந்து துறையில் சாதிக்க வேண்டும் எனவும் அவர் நினைக்கிறார். 1976-ஆம் ஆண்டில் தென் கொரியா இடையிலான கால்பந்து போட்டியில் தழுவிய தோல்வி அவரை மிகப் பெரிய துயரத்தில் ஆழ்த்துகின்றது. இருப்பினும், 1980-ஆம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் காலிறுதி போட்டியில் பங்கேற்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கின்றார்.

Luqman Hafidz as
அகமட் அலி
20 வயது மட்டுமே நிரம்பிய இவர் தனது வாழ்க்கையை முற்றிலும் கால்பந்து விளையாட்டில் அர்ப்பணிக்கின்றார். தேசிய கால்பந்து அணியில் சிறந்த ஒரு ஆட்டக்காரராக வலம் வர வேண்டும் என ஆசையைக் கொள்கிறார். ஆனால், இறுதியில், கர்வம் கொண்டவராக மாறுகின்றார். தன்னுடைய வாழ்க்கையில் ஒரு நாள் கால்பந்து துறையில் முக்கிய நபராக விளங்கும் சாம்சுல் ஜெர்சி எண் 10-தை அணிவது அவரது கனவாகும்.

Saran Kumar as
முத்து குமார்
22 வயதான தேசிய கால்பந்து அணியின் சிறந்த கோல்கீப்பரான முத்து, கால்பந்து மீது கொண்ட ஆர்வதால் அவரின் தந்தை இடையிலான உறவில் விரிசல் ஏற்படுகின்றது. ஆயினும், அவர் தன்னுடைய கொள்கையை விட்டுக் கொடுக்காமல், கால்பந்து துறையில் எதாவது ஒன்றைச் சாதித்து, அதனைத் அவரது தந்தையிடம் நிரூபிக்கப் பாடுபடுகிறார்.

Bront Palarae as
ரஹ்மான்
நகைச்சுவைத் தன்மைக் கொண்ட வானொலியில் விளையாட்டு வர்ணனையாளரான இவர் தன்னுடைய தொழில் மீது மிகுந்த ஆர்வத்தைக் கொண்டவர். இவரின் மன உறுதியும் விடாமுயற்சியும் தன்னுடைய வாழ்க்கையில் எந்தவொரு சூழ்நிலையிலும் ஏற்படும் பிரச்சனைகளை அமைதியாகக் கையாளும் தன்மையைக் கொண்டவர்.

Lim Jian Wen as
ஒங் தியாம் சய்
தேசிய கால்பந்து அணியின் மாற்று ஆட்டக்காரரான இவர் நம்பகத்தன்மை, எளிமான மற்றும் கடினமாக உழைக்கக்கூடியவர். அக்குழுவில் முக்கியமான ஒரு நபர் ஆவார்.

Eric Teng as
எரிக் யோங்
20 வயதான சபா மாநிலத்தை சேர்ந்த இவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். தேசிய கால்பந்து அணியில் விளையாட்டாளர்களின் இடையிலான பகைமையைப் போக்குவதற்காக இவர் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

Marianne Tan as
மேரியான்
25 வயதான ஒரு தொலைக்காட்சி தயாரிப்பாளரான இவள் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் சாதிக்க வேண்டும் எனும் இலட்சியத்துடன் பிரிட்டனிலிருந்து தன்னுடைய தாயகத்திற்கு திரும்புகிறார். இங்குள்ள சூழ்நிலை மற்றும் நிதி நெருக்கடிகள் காரணமாக அவள் தன்னுடைய இலட்சியத்தைத் தொடராமல் மீண்டும் பிரிட்டன் செல்ல திட்டமிடுகிறாள்.

Katrina Ho as
தான் சியூ லீ
வொக் கியோங் காதலி ஆவார். நல்ல குணங்களைக் கொண்ட இவள் வொக் கியோவிற்கு என்றும் மிகுந்த ஆதரவாக இருப்பாள்.

Daphne Low as
சோவ் மெய் லீங்
வொக் கியோங் இரண்டாவது இளைய சகோதரி. கல்வியில் சிறந்த தேர்ச்சிகளைப் பெற்ற இவள் எந்தவொரு வருத்தமும் இன்றி தன்னுடைய குடும்பத்திற்காக தன்னுடைய எதிர்காலத்தைத் தியாகம் செய்கிறார்.

Mark Williams as
ஹெரி
1980-ஆம் ஆண்டின் தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் ஆவார். மிகவும் கண்டிப்பானவரான இவர் தன்னுடைய ஆட்டக்காரர்களைப் பாராட்டுவது அரிதான ஒன்றாகும். இருப்பினும், துணிச்சலான இவர் மிகவும் விளையாட்டு உத்திகளைக் நன்றாக கையாளுவதும் தன்னுடைய ஆட்டக்காரர்களை நன்கு கூர்ந்து நோக்குவதில் திறமையானவர்.

Mohamad Taufiq as
அபு
தேசிய கால்பந்து அணியின் நடு ஆட்டக்காரரான இவர் அமைதியான மற்றும் எளிதாகப் பழகக்கூடிய குணத்தைக் கொண்டவர். எதிர்பாராத விதமாக தங்களுடைய அணியில் ஏற்படும் சண்டையில் ஈடுப்பட்டு அதற்கான தண்டனைப் பயிற்சியாளரிடன் பெறுகிறார்.

Frankie Lee as
அரங்கத்தின் பாதுகாப்பு காவலர்
இவர் தன்னம்பிக்கையுடைய வயதான அரங்கத்தின் பாதுகாப்பு காவலர் ஆவார். அங்கு நடைபெறும் அனைத்து விளையாட்டையும் கண்டு களிப்பவர்.