OlaBola Tamil Logo

கதைச் சுருக்கம்

இந்த ஒலாபோலா திரைப்படத்தில் வலம் வரும் மேரியான், 80-ஆம் நூற்றாண்டில் புதிய சரித்திரத்தைப் படைத்து ஆசியா கால்பந்து எதிர் அணியைத் திரும்பி பார்க்க வைத்த தேசிய கால்பந்து அணியைக் குறித்த ஆய்வை மேற்கொள்ள கடமை ஒன்று கொடுக்கப்படுகின்றது. ஆனால், அந்த வேலை அவளுக்குச் சலிப்புத் தன்மையை உண்டாக்க, மீண்டும் இங்கிலாந்து செல்ல முடிவெடுக்கின்றாள். இருப்பினும், புறப்படுவதற்கு முன் தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையைச் செய்து முடிக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றாள். இந்தப் பயணத்தில் சந்தித்த ஒரு சில விஷயங்கள் அவளுடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கின்றது.

மீண்டும் 80-ஆம் நூற்றாண்டைத் திரும்பி பார்க்கையில், அக்காலக்கட்டத்தில் பல சவால்களுக்கு மத்தியில் நம்முடைய தேசிய கால்பந்து அணி முக்கியமான கால்பந்து போட்டியில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலைமை சிக்கல்களை உண்டாக்கி கால்பந்து விளையாட்டாளர்களின் இடையில் பிரச்சினைகளை உண்டாகியது. எனினும், அவர்கள் உலக அரங்கில் விளையாட ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில், நாட்டிற்கு நற்பெயர் பெற்று தருவதற்கு, அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளை ஒதுக்கி வைத்தார்கள்.

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஒலாபோலா திரைப்படம் பல்லின இனத்தைச் சேர்ந்த நேயர்களின் இடையில் ஒற்றுமையையும் நல்லெண்ணத்தையும் உண்டாக்கும். அதுமட்டுமின்றி, நேயர்கள் மலேசியாவில் வாழும் பல்லின மக்களின் தனிச்சிறப்பு மற்றும் வலிமையை இந்தத் திரைப்படத்தின் வாயிலாகக் கண்டு களிக்கலாம்.